அரிசி ஆலைகளில் போலீசார் திடீர் சோதனை


அரிசி ஆலைகளில் போலீசார் திடீர் சோதனை
x
தினத்தந்தி 10 July 2023 1:30 AM IST (Updated: 10 July 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டி, பெரிய பள்ளப்படடி பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்

பொதுமக்களுக்கு ரேஷன்கடைகள் மூலம் அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக கொள்முதல் செய்யப்படும் நெல், அரிசி ஆலைகளில் அரசு வழிகாட்டுதலின்படி அரைக்கப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது. இத்தகைய அரிசி ஆலைகள் பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்றன. எனவே அந்த அரிசி ஆலைகளின் அரசு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யும்படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா உத்தரவிட்டார்.

இதையடுத்து மதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகதீசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் மற்றும் போலீசார் திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டி, பெரிய பள்ளப்படடி பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அரசு வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் ஆலைக்கு கொண்டு வரப்பட்ட நெல், அரைத்து தயாரான அரிசி ஆகியவை தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தனர்.

1 More update

Related Tags :
Next Story