ஆவடியில் காவல் துறையினர் அதிரடி சோதனை - குட்கா, கூல் லிப் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல்


ஆவடியில் காவல் துறையினர் அதிரடி சோதனை - குட்கா, கூல் லிப் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Nov 2023 10:33 AM GMT (Updated: 21 Nov 2023 10:39 AM GMT)

தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் போதைப்பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகள் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரக பகுதிக்கு உட்பட்ட கடைகளில் 150 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதில் ஆவடி, அம்பத்தூர், செவ்வாபேட்டை, போரூர், திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கடைகளில் மறைத்து வைக்கப்பட்ட குட்கா, கூல் லிப் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இந்த சோதனையில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story