போலீஸ் மோப்ப நாய் பிரிவை டி.ஐ.ஜி. ஆய்வு
போலீஸ் மோப்ப நாய் பிரிவை டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.
அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பகலவன் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, கைரேகை பிரிவு மற்றும் புகைப்பட பிரிவு ஆகிய சிறப்பு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு, கிராமங்கள் தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பொதுமக்களிடம் வன்கொடுமை மற்றும் சமூக நீதி பற்றியும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மேலும் சிறப்பாக பணிபுரியுமாறும் அறிவுரை வழங்கினார். இதையடுத்து அவர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோப்ப நாய் படை பிரிவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக போலீஸ் டி.ஐ.ஜி. பகலவன் அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்திலும், ஆயுதப்படை வளாகத்திலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.