ஆற்றின் நடுவில் சிக்கி கொண்டு ஆட்டம் காண்பித்த போதை ஆசாமி - உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போலீசார்


x

அரக்கோணத்தில் ஆபத்தை உணராமல் ஆற்று வெள்ளத்தில் குடிபோதையில் ஆட்டம் காட்டிய நபரை போலீசார் காப்பாற்றினர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஆபத்தை உணராமல் ஆற்று வெள்ளத்தில் குடிபோதையில் ஆட்டம் காட்டிய நபரை காவலர்கள் காப்பாற்றினர்.

தொடர்ந்து பெய்து வந்த மழையால் கொசஸ்த்தலை ஆற்றில் இருந்து கல்லாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அங்கிருந்த தரைப்பாலம் மூழ்கியது. இந்த நிலையில், ஆபத்தை உணராமல் குடிபோதையில் இருந்த ஒருவர் அந்தப் பாலத்தின் நடுவில் சிக்கி வெளியேற வழி தெரியாமல் ஆட்டம் காட்டி அனைவரையும் பீதியில் ஆழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, பணியில் இருந்த 3 காவலர்கள் துணிந்து கைகோர்த்து சென்று அந்த நபரை மீட்டனர்.

1 More update

Next Story