காவலர் பணி என்பது வேலை அல்ல சேவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


காவலர் பணி என்பது வேலை அல்ல சேவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 28 Feb 2024 6:41 PM IST (Updated: 28 Feb 2024 6:42 PM IST)
t-max-icont-min-icon

காவலர்கள் தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் நல்ல பாலமாக திகழ வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சியகம் நிறைவு விழாவில் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது ,

தமிழ்நாடு அரசு நல்லாட்சி மூலம் மக்களுக்கு அளித்துள்ள அமைதியான வாழ்க்கையை நிலைநிறுத்த காவலர்கள் உதவ வேண்டும்.

காவலர் நலன் காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். குற்றம் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் முனைப்பு காட்ட வேண்டும் .

காவலர் பணி என்பது வேலை அல்ல சேவை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பொதுமக்களை நேசிப்பதுடன், சாதி, மத வேறுபாடுகள் காட்டாமல் அனைவரையும் சமமாக நடத்திட வேண்டும்.காவலர்கள் தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் நல்ல பாலமாக திகழ வேண்டும், என தெரிவித்தார்.


Next Story