தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி


தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,செப்.12-

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

நினைவு தினம்

ராமநாதபுரம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 66-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவிடத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்களும் நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தே.மு.தி.க.

தே.மு.தி.க. சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் கொள்கை பரப்புச் செயலாளர் மோகன்ராஜ், பரமக்குடி நகர் செயலாளர் அன்பு தெட்சிணா மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நம்பி ஹரிராம், பரமக்குடி ஒன்றிய செயலாளர்கள் சந்திர பிரகாஷ், இப்ராஹிம் கேப்டன் மன்ற செயலாளர் முனியசாமி, மகளிர் அணி செயலாளர் செல்வி, முத்துக்கனி, ராணி உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தேவேந்திரகுல இளைஞர் எழுச்சி பேரவை சார்பில் நிறுவனர் தளபதி ராஜ்குமார் தலைமையில் மாநில தலைவர் குருநாதன், மாநில செயலாளர் அழகேசன், சட்ட பாதுகாப்பு செயலாளர் வேங்கை ராஜா, மாநில இளைஞரணி செயலாளர் பிரவீன் ராஜ், பரமக்குடி ஒன்றிய தலைவர் கணேசன் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் மாநில பொருளாளர் திலக பாமா தலைமையில் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், கிழக்கு மாவட்ட செயலாளர் ஹக்கீம், மேற்கு மாவட்ட செயலாளர் தவ அஜித், விருதுநகர் மாவட்ட செயலாளர் டேனியல், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் அன்ன மகாராஜா உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்திய ஜனநாயக கட்சி

இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் குணசீலன் தலைமையில் அமைப்புச்செயலாளர் வெங்கடேசன், துணைப்பொதுச் செயலாளர் ஜீவா, மாவட்ட தலைவர் ஆல்பர்ட் ராஜா, அமைப்புச் செயலாளர் இருதயராஜ் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மள்ளர் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மக்கள் விடுதலைக் கட்சியின் சார்பில் தலைவர் முருகவேல் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

புல்வாய்க்குளம் கிராமத்தின் சார்பில் கிராமத்தலைவர் போஸ் தலைமையில் செயலாளர் முருகவேல், பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் மாணவர் நல மன்ற நிர்வாகிகள், மகளிர் மன்ற நிர்வாகிகள், இளைஞர் சங்கத்தினர், பெருமாள் செவன்ஸ் கபடி குழுவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தாய் தமிழர் கட்சியின் சார்பில் நிறுவனத்தலைவர் பி.எம். பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் காமராஜ் செல்லத்துரை தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம் ராஜு, மாநில இளைஞர் பாசறை செயலாளர் பசீர் அகமது, மண்டல ஒருங்கிணைப்பாளர் குமரன், மாவட்ட தலைவர்கள் இசையரசன், நாகூர் கனி, பொருளாளர் சாமிநாதன் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இளைஞர் காங்கிரசார்

இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பட்டியல் துறையின் சார்பில் மாநில தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கோட்டை முத்து, ரமேஷ் பாபு, தெய்வேந்திரன். மாவட்ட எஸ்.சி. துறை தலைவர் வாந்தை ராஜா, மாநில செயலாளர் ஆனந்தகுமார், பரமக்குடி நகர் தலைவர் அகமது கபீர், வட்டார தலைவர் பாம்பூர் வேலுச்சாமி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் சரவண காந்தி, மாவட்ட ஊடகப்பிரிவு காஜா நஜ்முதீன், ஆராய்ச்சி துறை நாகூர்கான், மகிளா காங்கிரஸ் ராமலட்சுமி, கலைப்பிரிவு வலம்புரி மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி செங்கை விக்னேஸ்வரன் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம் பிரபு தலைமையில் மேற்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, வட்டார தலைவர் முருகேசன், மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துமாரி, முத்துசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், பரமக்குடி நகர் தலைவர் கிருஷ்ண விஜயன் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவேந்திரகுல மள்ளர் ெதாழில்வர்த்தக சபை சார்பில் மண்டல செயலாளர் மதுரை சிற்றரசு தலைைமயில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வீரசிவக்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சகுந்தலாேதவி, மாவட்ட இணை செயலாளர் தனபாலன், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செய்தி தொடர்பாளர் செந்தில்ராமு, போகலூர் ஒன்றிய செயலாளர் முருகவேல், மதுரை மண்டல செய்தி தொடர்பாளர் கல்லாயிரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் எம்.எல்.ஏ.

பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் திருவாரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நயினார் கோவில் ஒன்றிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் மகேந்திர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்ட மத்திய, மாநில பட்டியல் மற்றும் பழங்குடியினர் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் டாஸ்மாக் பிரிவு மாநில தலைவர் வேலு. செல்வக்குமார் தலைமையில் மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர் கர்ணன், மாவட்ட அமைப்பாளர் ஜெயசந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சேதுராமன், மாவட்ட செய்தி தொடர்பாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, சேகர், பவுன்ராஜ், முனியசாமி, காசி ராஜன், முத்து மாரி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பிரியா பசுபதிபாண்டியன்

தேவேந்திரகுல கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரியா பசுபதி பாண்டியன் தலைமையில் நிறுவன தலைவரும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினருமான பொன்னையாபுரம் மனோகரன், ஆத்தூர் ராஜேந்திரன், திண்டுக்கல் நடராஜன், சாத்தூர் ஆறுமுகம், குணா பாண்டியன், திருநெல்வேலி மணி, அண்டக்குடி முருகேசன், காயாம்பு பாண்டியன், காளிதாஸ் பாண்டியன், சீதகாதிர், மோகன், முருகன், மகாலிங்கம், விஜயகாந்த், சுரேஷ், கதிர், முரளி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் நிர்வாகிகள் வளர்மதி, பஞ்சவர்ணம், மீனாம்பாள், வள்ளி, கோவிந்தம்மாள், வளர்மதி, ராஜேஸ்வரி, கோவிந்தம்மாள், பூர்ண வள்ளி, லெட்சுமி, அமிர்தவல்லி, சிவரஞ்சனி, ஜெயபாரதி, பானுமதி, ஜெயா, சங்கீதா, ரஞ்சிதா, கலைவாணி, இந்திரா, கவிதா, முருகேஸ்வரி உட்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பரமக்குடி தேவேந்திரர் பணியாளர் நலச்சங்கம் சார்பில் தலைவர் மணிமுத்து, செயலாளர் எல்.ஐ.சி. ராஜ்குமார், துணைத்தலைவர் நல்லதம்பி உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் அமைத்து அஞ்சலி செலுத்தினர். பரமக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சேது தினகரன், மாவட்ட பிரதிநிதி துரைராஜ். ஒன்றிய இளைஞரணி வே.முத்து செல்லாபுரம் ஜெயசீலன், தகவல் தொழில்நுட்ப துறை ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், பரமக்குடி நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஏராளமான கிராமங்களில் இருந்து ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பல்வேறு கிராமங்களில் இருந்து முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேவேந்திர குல வேளாளர் சங்கம்

பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கோபிராஜன் தலைமையில் நிர்வாகிகளும், வாத்தியனேந்தல் கிராம தலைவர் செல்வி காசிநாதன், ஒன்றிய கவுன்சிலர் சாத்தையா ஆகியோரும் வீர தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சத்திரக்குடி-போகலூர் தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகளும் தளபதி வென்னிக்காலாடி தேவேந்திரன் இளைஞர் நற்பணி மன்றத்தினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர், மகளிர் மன்றத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


Related Tags :
Next Story