நெல்லை தாமிரபரணி ஆற்றில்அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் பலியான நினைவு தினத்தையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் பலியான நினைவு தினத்தையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
நினைவு தினம்
நெல்லையில் கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசார் தடியடி நடத்தியதில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இதையொட்டி ஆண்டுதோறும் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, ஓ.பி.சி.பிரிவு மாநில துணை தலைவர் வக்கீல் காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்கலம் ஜாகீர் உசேன், மாவட்டத் துணைத்தலைவர் கவிபாண்டியன், ஓ.பி.சி.பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பா.ஜனதா
பா.ஜனதா கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர், மேலிட பார்வையாளர் நீலமுரளியாதவ் ஆகியோர் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசிபாலா, மாவட்ட பொதுச்செயலாளர் முத்துபலவேசம், சுரேஷ், வேல்ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் முருகதாஸ், மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், செயலாளர் துரைபாண்டியன், நாகராஜசோழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள்.
விடுதலை சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. எம்.சி.கார்த்திக், செய்தி தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சியினர் மாநில செயலாளர் தேவேந்திரன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் லட்சுமணன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தமிழர் விடுதலைக்களம் கட்சியினர் நெல்லை மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியினர் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்தியா தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முல்லை நிலத்தமிழர் விடுதலைக் கட்சியினர் தலைவர் கரும்புலி கண்ணன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுச்செயலாளர் பாலமுருகன், அமைப்புசெயலாளர் முத்துக்கருப்பன், மாவட்ட செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திராவிட தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் திருக்குமரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். புரட்சி பாரதம் கட்சியினர் மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ்புலிகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையிலும், தமிழர் உரிமை மீட்பு களத்தினர் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையிலும், இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் உடையார் தலைமையிலும், சிவசேனா கட்சியினர் மாவட்ட தலைவர் மாரியப்பன், தென்மண்டல தலைவர் ராஜா பாண்டியன் ஆகியோர் தலைமையிலும், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் மாவட்ட செயலாளர் இரா.கருப்பசாமிபாண்டியன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
இதையொட்டி நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் பகுதியில் துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெல்லை மாநகரில் பல்வேறு பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டு இருந்தது.