பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி அமைப்பது குறித்து பொள்ளாச்சியில் நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பூத் கமிட்டி, பாசறை, மகளிர் அணி அமைப்பது குறித்த புத்தகங்களை வழங்கி பேசினார். மேலும் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி மகேஷ்வரன் என்பவர், எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாச்சலம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாணவர் அணி மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா, நிர்வாகிகள் அருணாசலம், கனகராஜ், மார்ட்டின், ராஜ்கபூர், மின்னல் சீனிவாசன், மகேஷ்குமார், அக்னீஷ் முகுந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story