பழனி அருகே பொங்கலை முன்னிட்டு கிரிக்கெட் திருவிழா - அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்


பழனி அருகே பொங்கலை முன்னிட்டு கிரிக்கெட் திருவிழா - அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
x

Image Courtesy : @r_sakkarapani twitter

தமிழ்நாடு அரசின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் திருவிழா நடைபெறுகிறது. இதில் மொத்தமாக 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த கிரிக்கெட் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் சக்கரபாணி கிரிக்கெட் விளையாடி போட்டியை துவக்கி வைத்ததால் அங்கிருந்தவர்கள் உற்சாகமடைந்தனர்.Next Story