'பொன்னியின் செல்வன்' ரிலீஸ் - எழுத்தாளர் கல்கியின் சொந்த ஊரில் கொண்டாட்டம்


பொன்னியின் செல்வன் ரிலீஸ் - எழுத்தாளர் கல்கியின் சொந்த ஊரில் கொண்டாட்டம்
x

எழுத்தாளர் கல்கியின் சொந்த ஊரில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

மயிலாடுதுறை,

எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட பல நட்சத்திரங்களைக் கொண்டு பிரம்மாணட பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

மொத்தம் 5 பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை, மணிரத்னம் 2 பாகங்கள் கொண்ட திரைப்படமாக எடுத்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கும், கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் இந்த திரைப்படம் நேரடியாக வெளியாகியுள்ளது. தொடக்க நாளில் பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள இந்த தினத்தில், எழுத்தாளர் கல்கியின் சொந்த ஊரில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். மயிலாடுதுறை மாவட்டம் புத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கல்கியின் பூர்வீக வீட்டை சென்று அவர் பார்வையிட்டார். மேலும் மணல்மேடு கடைவீதிகளில் எழுத்தாளர் கல்கியை போற்றும் விதமாக பேனர்கள் வைத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Next Story