சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்னிலையில் பிரேத பரிசோதனை


சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்னிலையில் பிரேத பரிசோதனை
x

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தற்கொலை செய்த பயிற்சி டாக்டர் உடல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

திருவாரூர்


திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தற்கொலை செய்த பயிற்சி டாக்டர் உடல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

பயிற்சி டாக்டர்

நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருைடய மகள் காயத்ரி(வயது22). இவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 4 ஆண்டு மருத்துவ படிப்பினை முடித்து விட்டு பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கியிருந்து காயத்ரி பணிக்கு சென்று வந்த நிலையில் அவர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவின்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. துணைபோலீஸ் சூப்பிரண்டு அன்பரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நிஷாமற்றும் போலீசார் காயத்ரி உயிரிழந்த விடுதி அறையில் தொடங்கி, அவருடைய தோழிகள், உடன் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள் என அனைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் தகனம்

இந்தநிலையில் இறந்த மாணவி காயத்ரியின் உடல் பாிசோதனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்னிலையில் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து மாணவி காயத்ரி உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக காயத்ரியுடன் படித்த மாணவ-மாணவிகள், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்பின் காயத்ரியின் உடல் திருவாரூர் நெய்விளக்கு தோப்பில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


Next Story