நாமக்கல் கோட்ட தபால் நிலையங்களில்செல்வமகள் சேமிப்பு கணக்கை தொடங்க சிறப்பு முகாம்பிப்ரவரி 9, 10-ந் தேதி நடக்கிறது


நாமக்கல் கோட்ட தபால் நிலையங்களில்செல்வமகள் சேமிப்பு கணக்கை தொடங்க சிறப்பு முகாம்பிப்ரவரி 9, 10-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 22 Jan 2023 6:45 PM GMT (Updated: 22 Jan 2023 6:46 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

அஞ்சல் இயக்குனரகத்தால் `அம்பிரிட் பெக்ஸ் பிளஸ்' திட்டம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி பிப்ரவரி 9 மற்றும் 10-ந் தேதிகளில் நாடு முழுவதும் அதிக அளவிலான பெண் குழந்தைகள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகள், கல்வித்துறை, சுகாதாரத்துறை, அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றுடன் அஞ்சல் துறை ஒருங்கிணைந்து பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு கணக்குகளை அதிக அளவில் தொடங்க உள்ளது. மத்திய அரசால் கடந்த 2015-ம் ஆண்டு செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1½லட்சம் வரை முதலீடு செய்யலாம். செல்வமகள் திட்டத்தில் 7.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

நாமக்கல் கோட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம்கள் பிப்ரவரி 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்குகளை அதிக அளவில் தொடங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story