மதுரையில் ஊராட்சி தலைவர் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் - பொதுமக்கள் வரவேற்பு, மதுப்பிரியர்கள் அதிர்ச்சி


மதுரையில் ஊராட்சி தலைவர் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் - பொதுமக்கள் வரவேற்பு, மதுப்பிரியர்கள் அதிர்ச்சி
x

ஊராட்சி தலைவர் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் கரிசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கூடும் பகுதிகளிலோ, பேருந்து நிறுத்தம் அருகிலோ மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தீர்மானத்தை மீறி பொதுமக்கள் கூடும் பகுதிகளில் மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story