முதியவரை கத்தியால் குத்திய தபால்காரர் கைது


முதியவரை கத்தியால் குத்திய தபால்காரர் கைது
x

முதியவரை கத்தியால் குத்திய தபால்காரர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

மேச்சேரி:-

மேச்சேரி அருகே கச்சராயனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). இவருடைய மருமகளிடம் அதே பகுதியை சேர்ந்த தபால்காரர் செந்தில்குமார் (வயது 40) அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கிருஷ்ணன் தன்னுடைய மருமகளை கண்டித்தார். மேலும் செந்தில்குமாரிடம் என்னுடைய மருமகளிடம் அடிக்கடி ஏன் பேசுகிறாய் எனக்கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் செந்தில்குமாருக்கும், கிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த செந்தில்குமார் கிருஷ்ணனை வயிற்றில் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தபால்காரர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

1 More update

Next Story