கட்டிடத்தின் மின் இணைப்பு துண்டிப்பு


கட்டிடத்தின் மின் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 20 July 2023 2:15 AM IST (Updated: 20 July 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கட்டிடத்தின் மின் இணைப்பு துண்டிப்பு

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரம்பாடியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்துக்கு வருவாய்த்துறையிடம் முறைகேடாக தடையில்லா சான்று பெற்று மின் இணைப்பு பெறப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து அந்த சான்றை ரத்து செய்து மின் இணைப்பை துண்டிக்க கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

அதன்படி கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி அந்த சான்றை ரத்து செய்தனர். மேலும் சேரம்பாடி மின்வாரிய துறையினர் அந்த கட்டிடத்தின் மின் இணைப்பை துண்டித்தனர்.

1 More update

Next Story