தொட்டுவிடும் தூரத்தில் மின்கம்பி: விளை நிலங்களின் அச்சத்துடன் பணி செய்யும் விவசாயிகள்...!
முதுகுளத்தூர் அருகே விளை நிலங்களின் ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிகளில் விவசாயிகள் உழவு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள விளை நிலங்களின் ஆபத்தான நிலையில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றது.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தெரிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள விலை நிலங்களில் வழியாக செல்லும் மின்கம்பிகள் தொட்டுவிடும் தூரத்தில் தாழ்வாக செல்கின்றன. மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பலத்த காற்று வீசும் போது மின் கம்பிகள் உரசி அருந்து விழும் அபாயம் உள்ளதால் விவசாயிகள், ஆடு மாடு மேய்ப்பவர்கள் அச்சம் அடைகின்றனர்.
எனவே விளை நிலங்கள் மீது தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.