7 துணை மின்நிலையங்களில் நாளை மின்சாரம் நிறுத்தம்


7 துணை மின்நிலையங்களில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

7 துணை மின்நிலையங்களில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

நாளை மின்தடை

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், பாரி நகர் சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லாத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேனா விளக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலத்தானியம், சடையம்பட்டி...

மேலத்தானியம், நகரப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், மேலத்தானியம், காரையூர், ஆலம்பட்டி, அரசமலை, எம்.உசிலம்பட்டி, காயாம்பட்டி, ஒலியமங்கலம், நகரப்பட்டி, சடையம்பட்டி, ஈச்சம்பட்டி, சங்கம்பட்டி, கொன்னையம்பட்டி, மறவாமதுரை, கண்காணிப்பட்டி, கல்லம்பட்டி, அம்மாபட்டி, அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, கண்டியாநத்தம், கேசராபட்டி, மறவாமதுரை, இடையாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

பொன்னமராவதி

கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கொப்பனாபட்டி, பொன்னமராவதி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, தொட்டியம்பட்டி, அஞ்சுபுளிபட்டி, மைலாப்பூர், வலையப்பட்டி, வேகுப்பட்டி, பிடாரம்பட்டி, காட்டுப்பட்டி, குழிபிறை, செம்பூதி, கொன்னைப்பட்டி, மேக்கினிப்பட்டி, சுந்தரசோழபுரம், செவலூர், கோவனூர், வாழைக்குறிச்சி, நெய்வேலி, கூடலூர், மேலப்பனையூர், பனையப்பட்டி ஆத்தூர், ராராபுரம், ஆலவயல், செமலாப்பட்டி, தூத்தூர் தேனிமலை, அம்பலகாரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

பழைய மாத்தூர், துறைக்குடி...

மாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், மாத்தூர் டவுன் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், சாமி ஊரணிபட்டி, மலையேறி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி, செங்களாக்குடி, சீத்தப்பட்டி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இலுப்பூர், மலம்பட்டி...

இலுப்பூர், பாக்குடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, மலம்பட்டி, கல்லுப்பட்டி, ஆலங்குடி, சித்தாம்பூர், லெக்கனாம்பட்டி, ராப்பூசல், பையூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story