மணல்மேடு, செம்பனார்கோவில், புத்தூர் பகுதிகளில் மின்நிறுத்தம்


மணல்மேடு, செம்பனார்கோவில், புத்தூர் பகுதிகளில் மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு, செம்பனார்கோவில், புத்தூர் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு, செம்பனார்கோவில், புத்தூர் பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மணல்மேடு

மணல்மேடு துணைமின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக மேற்கண்ட துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், சித்தமல்லி, வடவாஞ்சார், திருச்சிற்றம்பலம், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேலும் அன்றைய தினம் மின் நிறுத்தம் செய்வது மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேரமாறுதலுக்குட்பட்டது. இந்த தகவலை மணல்மேடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளையராஜா தெரிவித்தார்.

செம்பனார் கோவில்

இதேபோல் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட கிடாரங்கொண்டான் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் செம்பனார்கோவில் மின்பாதையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மேற்கண்ட மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் கிடாரங்கொண்டான், பொன்செய், கீழையூர். செம்பனார்கோவில், பரசலூர் மெயின்ரோடு, மேலப்பாதி, கருவாழக்கரை, மேலையூர், கஞ்சாநகரம், ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் மின் நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும்இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் தெரிவித்தார்.

புத்தூர், விளந்திட சமுத்திரம்

சீர்காழி அருகே ஆச்சாள்புரம், அரசூர் துணை மின் நிலையங்களில் இருந்து துளசேந்திரபுரம் பகுதிகளுக்கு செல்லும் உயர்அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) புத்தூர், சீயாளம், ஆரப்பாக்கம், விளந்திட சமுத்திரம், ஆண்டி கோட்டம், சேந்தங்குடி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலினை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்தார்.


Next Story