வண்டிமேடு, பேரங்கியூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்


வண்டிமேடு, பேரங்கியூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வண்டிமேடு, பேரங்கியூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விழுப்புரம்


விழுப்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட நந்தவனம் மின்னூட்டியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வண்டிமேடு, முத்தோப்பு, மாம்பழப்பட்டு சாலை, சென்னை மெயின்ரோடு, மேல்தெரு, மந்தக்கரை, சித்தேரிக்கரை, விராட்டிக்குப்பம் சாலை, கே.வி.ஆர். ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் அரசூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பேரங்கியூர், சேமங்கலம் மின்னூட்டிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசூர், இருவேல்பட்டு, காரப்பட்டு, பேரங்கியூர், வெள்ளையாம்பட்டு, குச்சிப்பாளையம், எம்.டி.பட்டு, கே.டி.பட்டு, சேமங்கலம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story