ஊ.மங்கலம், மேலப்பாளையூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


ஊ.மங்கலம், மேலப்பாளையூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

ஊ.மங்கலம், மேலப்பாளையூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் மின்கோட்டத்திற்குட்பட்ட ஊ.மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கங்கைகொண்டான், ஊ.அகரம், ஊ.கொளப்பாக்கம், கொள்ளிருப்பு, இருப்புக்குறிச்சி, ஊத்தங்கால், ஊ.மங்கலம், சமட்டிக்குப்பம், அம்மேரி, அரசக்குழி, காட்டுக்கூனங்குறிச்சி, பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், அம்பேத்கார் நகர், வி.குமாரமங்கலம், கோபாலபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் மேலப்பாளையூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலப்பாளையூர், வல்லியம், சி.கீரனூர், மருங்கூர், தொழுதூர், காவனூர், பவழங்குடி, தேவங்குடி, கீழப்பாலையூர், கம்மாபுரம், கோபாலபுரம், கீணனூர், கொடுமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் விருத்தாசலம் மின் வாரிய செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story