வாகவாசல், ஆவூர், நார்த்தாமலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


வாகவாசல், ஆவூர், நார்த்தாமலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

பராமரிப்பு பணிகள் காரணமாக வாகவாசல், ஆவூர், நார்த்தாமலை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் வடசேரிப்பட்டி பீடரில் அதிக திறன் கொண்ட மின்கம்பி மாற்றும் பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி வடசேரிப்பட்டி, வாகவாசல், இடையப்பட்டி, தர்ஹா, தென்னத்திரையன்பட்டி, கேடயப்பட்டி, மேக்குடிப்பட்டி, பூங்குடி, புத்தாம்பூர், செம்பாட்டூர், ராஜகுளத்தூர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை இயக்குதலும், காத்தலும் உதவி செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாத்தூர், ஆவூர்...

இதேபோல மாத்தூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மாத்தூர் டவுன் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், சாமிஊரணிபட்டி, மலையேறி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி, செங்களாக்குடி, சீத்தப்பட்டி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி, சஞ்சீவிராயர் கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

நார்த்தாமலை, ஒடுக்கூர்...

கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அம்மாச்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், (கீரனூர் பேரூராட்சி பகுதிகள் நீங்கலாக) குளத்தூர், இளையாவயல், நாஞ்சூர், பிரதகாம்பாள்புரம், கிருஷ்ணன் பாரப்பட்டி, சத்தியமங்கலம், முத்துக்காடு, காவேரி நகர், திருமலைராயபுரம், உப்பிலியக்குடி, நார்த்தாமலை, ஒடுக்கூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story