துவாரகா பேசியதின் பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் -பழ.நெடுமாறன் பேட்டி

துவாரகா பேசியதின் பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் -பழ.நெடுமாறன் பேட்டி
x
தினத்தந்தி 28 Nov 2023 2:15 AM IST (Updated: 28 Nov 2023 12:02 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

மாவீரர் நாளையொட்டி பிரபாகரனின் மகள் துவாரகா இணையதளம் வழியாக உரையாற்றினார். அந்த உரை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா மாவீரர் நாளில் இணையம் வழியாக உரையாற்றியிருக்கிறார்.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கான ஆயுதப்போராட்டம் ஓய்ந்தாலும், அவர்களின் அரசியல் போராட்டம் தொடரும் எனவும், அதற்கு தமிழர்கள் உதவ வேண்டும் எனவும் அவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த போரின்போது பிரபாகரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அழிந்து போனதாக கூறினர். இப்போது அவரது மகள் வந்து உலக மக்கள் முன்னால் பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பொருள் என்ன, அவராக வந்து செய்திருக்க முடியாது. பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பதுதான் உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story