சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

விருத்தாசலம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து சந்தன காப்பு அலங்காரத்தில் நந்தீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் முதனை முதுகுன்றீஸ்வரர், பாலக்கொல்லை அழகேஸ்வரர், தேவஸ்தான கோபுராபுரம் ஆதிசக்தி ஈஸ்வரர், புலியூர் வீரசேகரர், தர்மநல்லூர் தர்மபுரீஸ்வரர், ராஜேந்திரப்பட்டினம் நீலகண்டேஸ்வரர் உள்பட விருத்தாசலம் பகுதியில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் உள்ள அனந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கொல்லிமலை கீழபாதி கிராமத்தில் உள்ள சிவலோக நாதர் கோவில், மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Next Story