2 நாள் பயணமாக தனி விமானத்தில் தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


2 நாள் பயணமாக தனி விமானத்தில் தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகை தந்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்வு தமிழகம் வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.

மதுரை,

ஜனாதிபதியாக பதவி ஏற்றபின்பு, திரவுபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகம் வருகை வந்தார். தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு ஜனாதிபதி வருகை தந்தார். ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

2 நாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி நண்பகல் 12.15 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார். அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் தக்கார் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். சிவராத்திரியான இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார்.

கோவிலில் இருந்து 12.45 மணிக்கு மேல் புறப்பட்டு, அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவுக்குப்பின் சற்று நேரம் ஓய்வு எடுக்கும் அவர், பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானத்தில் கோவை செல்லும் அவர், ஈஷா யோகா மையம் சார்பில் நடக்கும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.

1 More update

Next Story