வருமான வரித்துறையினரை சோதனை செய்யவிடாமல் தடுப்பது அரசமைப்பு விதிமீறல்: ஜெயக்குமார்


வருமான வரித்துறையினரை சோதனை செய்யவிடாமல் தடுப்பது அரசமைப்பு விதிமீறல்: ஜெயக்குமார்
x

வருமான வரித்துறையினரை சோதனை செய்ய விடாமல் தடுப்பது அரசமைப்பு விதிமீறல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

வருமான வரி சோதனை செய்வது வருவான வரித்துறையினரின் கடமை. வருமான வரித்துறைக்கு அரசியல் வாதியோ, நடிகரோ, தொழிலதிபரோ வித்தியாசம் இல்லை. அவர்களை சோதனை செய்ய விடாமல் தடுப்பது அரசமைப்பு விதிமீறல்.

கடந்த 2 ஆண்டுகளில் ஊழல் திமிங்கலங்கள் அதிகம் உள்ளனர். பணக்கார குடும்பத்தை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும், கரூர் மாவட்ட எஸ்.பி. மீதும் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.


Next Story