டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை


டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் உள்ள பழைய இரும்பு கடை, பஞ்சர் கடை, பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி விற்கும் கடைகளில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சுப்பிரமணியன், வட்டார சுகாதார ஆய்வாளர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் மாயக்கண்ணன், செல்வராஜ் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள், பேரூராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் பழைய டயர்கள் இருந்தன. இதையடுத்து அந்த டயர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர். பின்னர் அப்பகுதியில் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து கச்சிராயப்பாளையம், தொட்டியம், கனியாமூர், நைனார்பாளையம், வி. கூட்ரோடு ஆகிய பகுதிகளிலும் டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.


Next Story