காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை:பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்


காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை:பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கூடலூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

தேனி

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கூடலூரில் விழிப்புணர்வு முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு காமய கவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜூதீன் தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார். இதையடுத்து பொதுமக்கள் வீடுகளில் கபசுர குடிநீரை அவர்களே தயாரித்து குடிப்பதற்கு ஏதுவாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.


Related Tags :
Next Story