தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, வட்டாரப்பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முத்துக்குமரன் கண்டன உரையாற்றினார். ஆர்பாட்டத்தில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை எண்ணும், எழுத்தும் திட்டத்தினை ஆசிரியர் பயிற்சி (பி.ஏட்) பெறும் மாணவ, மாணவிகள் ஆய்வு செய்யும் கல்வித்துறையின் நடவடிக்கைகளை கைவிடக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story