தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் முருகேசன் கோரிக்கைகள் குறித்து பேசினார். பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்து அவமதிப்பதை கண்டித்தும், பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்துதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

திருமயம், திருவரங்குளம்

திருமயம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் அடைக்கலசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முத்து கருப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சீதாலட்சுமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டி, கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் பவுல் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் ராஜதுரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாவட்ட செயலாளர் குமாரசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் வட்டார பொருளாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.


Next Story