தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை
இளையான்குடி
இளையான்குடி வட்டார கல்வி அலுவலகத்தின் முன்பு எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஆசிரியர் பயிற்சி (பி.எட்) மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க தலைவர் இளமாறன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ஆல்பர்ட் அசோக்குமார் விளக்கவுரை நிகழ்த்தினார். முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொருளாளர் கண்ணப்பன் நன்றி கூறினார். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
Related Tags :
Next Story