தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் பணிகளை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்து ஆசிரியர்களை அவமதிப்பதை கண்டித்து நேற்று தோகைமலை வட்டார கல்வி அலுவலகம் முன்பு தோகைமலை வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அமல்ராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க நிர்வாகிகள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக வட்டார செயலாளர் மணிவேல் வரவேற்று பேசினார். முடிவில் வட்டார பொருளாளர் ஜெயமணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story






