தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
விராலிமலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆசிரியர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விராலிமலை வட்டார தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ராசா சிதம்பரம் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று திரண்டு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். முடிவில் வட்டார பொருளாளர் இளையராஜா நன்றி கூறினார்.
இதேேபால் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு சென்னையில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.