'வங்கிக்கணக்கில் பணம் செலுத்துவோம் என்று பிரதமர் கூறவில்லை' - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை


வங்கிக்கணக்கில் பணம் செலுத்துவோம் என்று பிரதமர் கூறவில்லை - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை
x

கடந்த 9 ஆண்டுகளில் 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்த பிறகும் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்போம் என்று தான் பிரதமர் சொன்னதாகவும், அந்த பணத்தை ஒவ்வொரு இந்தியரின் வங்கிக்கணக்கிலும் செலுத்துவோம் என்று கூறவில்லை எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



Next Story