நேற்றைய நிகழ்வில் தமிழ் கலாச்சாரத்தை தோளில் தூக்கி, மண்ணை நேசித்து பிரதமர் மோடி பேசினார் - அண்ணாமலை பேச்சு


நேற்றைய நிகழ்வில் தமிழ் கலாச்சாரத்தை தோளில் தூக்கி, மண்ணை நேசித்து பிரதமர் மோடி பேசினார் - அண்ணாமலை பேச்சு
x

நேற்றைய நிகழ்வில் தமிழ் கலாச்சாரத்தை தோளில் தூக்கி, மண்ணை நேசித்து பிரதமர் மோடி பேசினார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை,

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

தமிழ்நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் சரித்திர நாள். நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழை உயர்த்திப் பிடித்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பு பிரதமரை நெகிழச் செய்தது.

பாரத பிரதமர் மோடி வருகைக்காக கட்சியினர் அனைவரும் கடினமாக உழைத்தனர். நேற்றைய நிகழ்வில் தமிழ் கலாச்சாரத்தை தோளில் தூக்கி, மண்ணை நேசித்து பிரதமர் மோடி பேசினார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் குறைவாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ந்து கல்வியை அழித்ததற்கான பட்டத்தை திமுகவுக்குத் தான் தர வேண்டும்.

சமூக நீதி பற்றி பிரதமர் மோடி இருந்த மேடையில் மு.க.ஸ்டாலின் பேசியது எள்ளி நகையாட வேண்டிய விஷயம் தான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த எல்.முருகனும் பிரதமர் அருகில் மேடையில் அமர்ந்திருந்தார். இதுவே சமூக நீதி.

தாய்மொழியான தமிழில் படிப்பதை திமுக அரசு கட்டாயமாக்கியதா? இல்லை. புதிய தேசிய கல்விக்கொள்கை மூலம் அதை கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி. ரெயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து விட்டு தமிழ் மொழியை காப்பது போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

ஜூன் முதல் வாரத்தில் திமுக அரசு செய்த மிகப்பெரிய இரண்டு ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். இனி ஒவ்வொரு துறை வாரியாக ஊழல் பட்டியலை வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story