பிரதமர் மோடி வரும் மார்ச் 27-ந்தேதி சென்னை வருகை


பிரதமர் மோடி வரும் மார்ச் 27-ந்தேதி சென்னை வருகை
x
தினத்தந்தி 15 March 2023 7:59 AM IST (Updated: 15 March 2023 8:53 AM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தர உள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 27-ந்தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார். இந்த திறப்பு விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story