பிரதமரின் நிதியுதவி திட்டம்: ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம்


பிரதமரின் நிதியுதவி திட்டம்: ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம்
x

பிரதமரின் நிதியுதவி திட்டம் தொடர்பாக விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை 30-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளின் கவுரவ நிதியுதவித்திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 41 ஆயிரத்து 290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் நேரடி சிட்டா உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக ஏப்ரல்- செப்டம்பர், ஆகஸ்டு- நவம்பர் மற்றும் டிசம்பர்- மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 6,352 பயனாளிகள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். மேலும் விவசாயிகள் விரைந்து ஆதார் எண் விவரம் அடங்கிய இ.கே.ஒய்.சி.யினை பதிவேற்றம் செய்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் 15-வது தவணை செப்டம்பர் மாதத்தில் விடுவிக்க உள்ளதால் இ.கே.ஒய்.சி. பதிவேற்றம் செய்யாமல் உள்ள விவசாயிகள் வருகிற 30-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம். இதன் பொருட்டு வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story