பிரதமர் மோடி வருகை - மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தடை


பிரதமர் மோடி வருகை - மீனாட்சி அம்மன் கோவிலில்  பக்தர்களுக்கு தடை
x

மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார்.

மதுரை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார். இதன் நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது. இதற்காக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறார்.பல்லடம் மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.

இதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வருகிறார். பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பின் பிரதமர் மோடி மதுரை செல்கிறார் .

மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார்.

இந்த நிலையில் ,பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாலை 4.30 மணி முதல் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story