திருத்தணியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


திருத்தணியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

திருத்தணியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருத்தணியில் உள்ள பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக நேற்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன், திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வசித்தனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணியமர்வு ஆணையை அமைச்சர் காந்தி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரண், திட்டக்குழு உறுப்பினர் ஷியாம் சுந்தர், கவுன்சிலர் அசோக், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


Next Story