காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் - நாளை நடக்கிறது
காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. இதுக்குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம்
படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு நேர்முக தேர்வை நடத்த உள்ளது.
பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12-வது மற்றும் 10-ம் வகுப்பு படித்தவர்கள், ஆய்வக உதவியாளர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story