போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு; கலெக்டர் வழங்கினார்


போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு; கலெக்டர் வழங்கினார்
x

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தேனி

தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, தமிழ்நாடு நாளையொட்டி கடந்த மாதம் 7-ந்தேதி பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடந்தது. அதுபோல், கருணாநிதி பிறந்தநாளையொட்டி கடந்த மாதம் 28-ந்தேதி பேச்சுப்போட்டி நடந்தது.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் முரளிதரன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலையை வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story