வள்ளலார் முப்பெரும் விழா:போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார்


வள்ளலார் முப்பெரும் விழா:போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 22 Jan 2023 6:45 PM GMT (Updated: 22 Jan 2023 6:47 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்லில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 'வள்ளலார் 200' முப்பெரும் விழா நடந்தது. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உதவி ஆணையர் இளையராஜா வரவேற்றார். ராமலிங்கம் எம்.எல்.ஏ., ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு, வள்ளலார் திருவருட்பா போட்டிகளான பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவியம், பாடல் ஒப்புவித்தல் மற்றும் இசை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ராஜேஸ்குமார் எம்.பி. பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

தொடர்ந்து சன்மார்க்க சான்றோர்கள் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக ஞானதீபம் ஏற்றியும், சன்மார்க்க கொடி கட்டியும் ஊர்வலம் நடந்தது. மேலும் வள்ளலாரின் சிறப்புகள், ஆன்ம நேய ஒருமைப்பாடு, வள்ளலாரின் விஞ்ஞானம், அன்பு செயல் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுநடந்தது.

முடிவில் நாமக்கல் மாவட்ட சுத்த சன்மார்க்க சிறுவர், சிறுமிகளின் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், பணியாளர்கள், நாமக்கல் மாவட்ட சுத்த சன்மார்க்க சங்கங்களின் நிர்வாகிகள்உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story