மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களை நல்வழிப்படுத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு - அமைச்சர் முத்துசாமி தகவல்


மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களை நல்வழிப்படுத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு - அமைச்சர் முத்துசாமி தகவல்
x

அனைத்து வகைகளிலும் மதுப்பழக்கத்தை தடுக்கவும், குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

கோவை,

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதோடு, புதிதாக மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செய்யும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் கூறியுள்ளார். எனவே அனைத்து வகைகளிலும் மதுப்பழக்கத்தை தடுக்கவும், குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்."

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.




Next Story