நாகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் 5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்


நாகை அரசு கலை அறிவியல் கல்லூரியில்  பேராசிரியர்கள் 5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
x

நாகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பேராசிரியர்கள் 5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நாகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பேராசிரியர்கள் 5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராசிரியர்கள் போராட்டம்

நாகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றி வரும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குவது நிலுவையில் உள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை 3 மாதங்கள் சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி பேராசிரியர்கள் இன்று 5-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீவிரப்படுத்த...

இதனால் வகுப்புகள் நடைபெறாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து பேராசிரியர்கள் கூறுகையில், 'கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் எப்படி பணியாற்ற முடியும்? எங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளது. உயர் கல்வித்துறையின் அலட்சியத்தால் சம்பளம் இன்றி சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்.

5 நாட்களாக போராடி வருகிறோம். இதுவரை பல்கலைக்கழகமோ, மாவட்ட நிர்வாகமோ அழைத்து பேச முன்வரவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்' என்றனர்.

வேதாரண்யம்

வேதாரண்யத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் இன்று கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story