மதுவிலக்கு பிரசார கூட்டம்


மதுவிலக்கு பிரசார கூட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2023 7:30 PM GMT (Updated: 2 Oct 2023 7:30 PM GMT)

கோத்தகிரி அருகே மதுவிலக்கு பிரசார கூட்டம் நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி அருகே திம்பட்டி கிராம சமுதாய நலக்கூடத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி மதுவிலக்கு பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊர்தலைவர் தோணா கவுடர் தலைமை தாங்கி, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, தேசிய கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட மதுவிலக்கு குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.ஜே.ராஜூ பேசும் போது, 1983-ம் ஆண்டு கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு மதுவிலக்கு பிரசார பாத யாத்திரை நடைபெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூர்ந்தார். பல குடும்பங்களின் சீரழிவிற்கு காரணமாகவும், கொலைகள், தற்கொலைகள் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு மதுபழக்கமே காரணமாக அமைகிறது. எனவே, மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்றார்.

இதில் காந்திய சிந்தனையாளர் சங்க நிர்வாகி ராம்தாஸ், கிராம நிர்வாகிகள் ரமேஷ், மணி, பாலன், சீனிவாசன் ஆகியோர் உள்பட மக்கள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக தர்மராஜ் வரவேற்றார். முடிவில் ராஜ்குமார் நன்றி கூறினார்.


Next Story