சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு இவைதான் திமுக ஆட்சியின் சாதனைகள் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு இவைதான் திமுக ஆட்சியின் சாதனைகள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருச்சி,
திருச்சியில் தொண்டர்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
முதல்-அமைச்சராக இருந்த அவருக்கு நினைவு மண்டபம் கட்டுங்கள் நாங்கள் வேண்டாமென்று கூறவில்லை. ஆனால் போதுமான நிதி இல்லாதபோது சென்னை மெரினாவில் ரூ.80 கோடிக்கு எழுதாத பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியமா?. இதற்கு பதிலாக ரூ.80 கோடிக்கு 6.5 கோடி தமிழக மக்களுக்கும் பேனா வாங்கி கொடுத்து விடலாம்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களாகிறது என்ன செய்தீர்கள்? என்று மக்கள் கேட்கின்றனர். மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. எந்த திட்டத்தையும் நிறைவேற்றவும் இல்லை. அதனால் நமக்கு என்ன பலன்.
கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், கல்வி கடன் ரத்து என்ற எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு இவைதான் திமுக ஆட்சியின் சாதனைகள்.
இவ்வாறு அவர் பேசினார்.