வீட்டில் விபசாரம்; செல்போனில் வலைவிரித்த தம்பதி கைது


வீட்டில் விபசாரம்; செல்போனில் வலைவிரித்த தம்பதி கைது
x

லத்தேரி அருகே வீட்டில் விபசாரம் செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த விக்கிரமாசிமேடு கிராமம், கொல்லைமேடு பகுதியில் உள்ள தனி வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் எம்.குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அணைக்கட்டு தாலுகா, ஏரியூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (வயது 28), இவரது மனைவி பானுப்பிரியா (30) ஆகிய இருவரும் செல்போன் மூலம் ஆண்களுக்கு வலைவிரித்து, அவர்களிடம் கவர்ச்சிகரமாகப் பேசி விபசார நோக்கத்திற்காகப் பெண்களை உல்லாசத்திற்குப் பழகவிட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த 3 இளம் பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கார்த்தி, பானுப்பிரியா ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story