கண்டன ஆர்ப்பாட்டம்


கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிளாலர் சங்கம், இந்திய தொழிர் சங்க மையம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் முத்து ராமு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மயில் வாகணன், இந்திய தொழிலாளர் சங்க மையம் முத்து விஜயன் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் முருகன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில், இந்திய தொழிலாளர் சங்க மைய நிர்வாகிகள் பசலை நாகராஜ், சந்திரசேகரன், விவசாய தொழிற்சங்க தாலுகா செயலாளர் அங்குதான், தாலுகா குழு உறுப்பினர்கள் சண்முகையா, குருசாமி, ஜான்சிராணி, கிளை செயலாளர் வீரசெம்பொன் மற்றும் விவசாய தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story