தர்மபுரியில்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


தர்மபுரியில்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2023 7:00 PM GMT (Updated: 25 Aug 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட புதிய ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற, இறந்த, ஓய்வு பெறும் ஊழியர்கள் அனைவருக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சக்திவேல், மாது, மணி, சேரலாதன், மாதையன், ராஜேஸ்வரி, ஷாநவாஸ், மோகன், செல்வம், கருப்பண்ணன், சரவணன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி வரை நடக்கிறது.


Next Story