நம்பியூரில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


நம்பியூரில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

நம்பியூரில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூரில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

நம்பியூர் காமராஜ் காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு தொடக்கப்பள்ளிக்கு அருகே பேரூராட்சி சார்பில் ரூ.1 கோடியே 57 லட்சம் செலவில் நவீன மின்மயானம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மின் மயானம் நம்பியூரில் இருந்து எலத்தூர் செல்லும் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இப்பகுதி மக்கள் தங்களுடைய வீடுகளில் கருப்பு கொடி கட்டி இந்த திட்டத்துக்கு தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள 3 கிராமங்களை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு சென்று நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இடத்தை மாற்ற முடிவு

இதையடுத்து பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள், இந்த தி்்ட்டத்தை நிறுத்தாவிட்டால் பல்வேறு போராட்டங்கள் நடத்துவோம் என்றனர்.

அதற்கு பேரூராட்சி தலைவர், 'பொதுமக்களுக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. பேரூராட்சிக்கு சொந்தமான இடத்திலேயே இந்த மின் மயானம் அமைக்கப்பட உள்ளது. இன்று நடைபெற இருந்த பூமிபூஜையையும் நிறுத்தி வைத்துள்ளோம். இதுகுறித்து பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மின்மயானம் அமைக்கும் இடத்தை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும'் என்றார். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story