பழனியில் கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்குப்பதிவு


பழனியில் கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்குப்பதிவு
x

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட், வி.சி.க. கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். இதனிடையே கவர்னரை வரவேற்பதற்காக பழனி பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க. தொண்டர்கள் கூடினர்.

போலீசார் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்திய போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சுமார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியில் கம்யூனிஸ்ட், வி.சி.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கம்யூனிஸ்ட், வி.சி.க. கட்சிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.




Next Story